உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, சென்னை மாநகராட்சியில், மண்டல உதவி கமிஷனர் மற்றும் செயற்பொறியாளர்களாக பணி புரிந்த 11 பேர், கண்காணிப்பு பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.கண்காணிப்பு பொறியாளர் ஒதுக்கப்பட்ட துறைகள்பாலமுரளி எலட்ரிக்கல், நகரமைப்பு பிரிவுவிஜயலட்சுமி பூங்கா, விளையாட்டு மைதானம், பேரிடர் மேலாண்மைராஜசேகர் திடக்கழிவு மேலாண்மைசீனிவாசன் சிறப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டிஅருள்விஜூ கட்டட துறை, நமக்கு நாமே திட்டம்சுதாகர் பாலங்கள் முருகன் மழைநீர் வடிகால்வாய்திருமுருகன் பேருந்து சாலை அண்ணாதுரை வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம்புகழேந்தி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம்உமாபதி மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகம்

ஆறு மண்டல உதவி கமிஷனர்கள் பதவி உயர்வு பெற்று செல்வதால், உதவி கமிஷனர் பொறுப்பு, அங்கு பணிபுரியும் செயற் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மண்டலம் உதவி கமிஷனர் (பொறுப்பு)மாதவரம் கார்த்திகேயன்திரு.வி.க.நகர் சரவணன்வளசரவாக்கம் பானுகுமார்அடையாறு ஆர்டின்பெருங்குடி முரளிசோழிங்கநல்லுார் தனிகைவேலன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி