உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 11 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்

11 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்

அரும்பாக்கம்,:அரும்பாக்கம் பகுதியில், மெத்தம் பெட்டமைன் போதை பொருள் விற்ற வழக்கில் கொடுங்கையூரைச் சேர்ந்த தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27, ஆகியோர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, இவர்களுடன் பெங்களூரைச் சேர்ந்த விஸ்வநாதன், வண்ணராப்பேட்டை மஸ்தான் உட்பட மொத்தம், 11 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்களை நேற்று முன்தினம், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆறு நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். இவர்களுக்கு எங்கிருந்து போதை பொருள் சப்ளை செய்யப்பட்டது, யார் விற்றனர் என, விசாரிக்க உள்ளனர். விசாரணைக்குப் பின், 18ம் தேதி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ