தனியார் லாக்கரில் 11.5 சவரன் நகை மாயம்
கே.கே.: தனியார் லாக்கரில் வைத்த 11.5 சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரி க்கின்றனர். கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வி, 52. இவர், கே.கே., நகர், லட்சுமணசாமி சாலையில் உள்ள 'சக்தி லாக்கர்' என்ற தனியார் லாக்கர் நிறுவனத்தில், 2024ம் ஆண்டு, 11.5 சவரன் உடைய இரண்டு செயின்களை வைத்துள்ளார். இந்த லாக்கரின் சாவி, ஒன்று செல்வியிடமும், மற்றொரு சாவி லாக்கர் நிறுவனத்திடமும் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் செல்வி சோதனை செய்தபோது, லாக்கரில் இருந்த 11.5 சவரன் நகை மாயமானது தெரிய வந்தது. செல்வி புகாரையடுத்து, கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.