மேலும் செய்திகள்
கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு
08-Aug-2025
பெரம்பூர், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 12 சவரன் நகைகள் மற்றும் 150 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பூர், அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபா, 65; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது இளைய மகன், அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வர இருந்ததால், அவரை பார்ப்பதற்காக பெங்களூரு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன் பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. முன் பக்க கதவு மூடியே இருந்தது. ஆனால் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகைகள், 25,000 ரூபாய், 150 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Aug-2025