வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல நடுத்தர வர்க்க குடும்பத்து பெண்களும் விண்ணப்பம் அளிப்பது அயோக்கியதனம்
மேலும் செய்திகள்
கண்ணப்பா டிரைலர்
16-Jun-2025
நொளம்பூர், நொளம்பூரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க, பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நேற்று முதல் துவங்கியது. இதில், வளசரவாக்கம் மண்டலம் 143வது வார்டு முகாம், முகப்பேர் மேற்கு பிரதான சாலை நொளம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.மொத்தம் 20 கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் அதிகளவில் பங்கேற்று, மாதம் 1,000 ரூபாய் பெறுவதற்காக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர்.அவர்களின் வசதிக்காகவே, நான்கு கவுன்டர்கள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள் சேவை உள்ளிட்ட பிறவற்றுக்காக மற்ற கவுன்டர்களிலும் அதிகளவில் கூட்டம் நடத்தப்பட்டது.அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்படும் நிலையில், ஒரு 'சர்வர்' மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் பதிவு செய்து, பரிசீலனையை முடிக்க தாமத ஆனதால், பயனாளிகள் அவதியடைந்தனர்.இம்முகாமில் நேற்று மட்டும் மொத்த சேவைக்காக 2,215 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1,230 விண்ணப்பங்கள் மகளிர் உரிமை தொகைக்காக பெறப்பட்டவை. இதேபோல், திருவல்லிக்கேணி உட்பட அனைத்து பகுதிகளிலும், ஏராளமானோர் குவிந்து விண்ணப்பித்தனர்.
பல நடுத்தர வர்க்க குடும்பத்து பெண்களும் விண்ணப்பம் அளிப்பது அயோக்கியதனம்
16-Jun-2025