கிளப்களுக்கு இடையிலான வாலிபால் சாந்தோமில் 14 அணிகள் பலப்பரீட்சை
சென்னை :சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளி சார்பில், 'கிளப்'களுக்கு இடையிலான யு - 15 வாலிபால் போட்டி, நேற்று துவங்கியது.மாணவர்களுக்கான இப்போட்டியில், 15 வயதுக்கு உட்பட ஒய்.எம்.சி.ஏ., - மயிலாப்பூர் பாய்ஸ், கண்ணகி நகர், செயின்ட் பீட்ஸ், மெரினா பீச் பாய்ஸ், மான்போர்ட் உள்ளிட்ட, 14 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.போட்டிகள், 'லீக் கம் நாக் அவுட் முறையில், நான்கு குழுக்களாக நடக்கின்றன. நேற்று காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, செயின்ட் பீட்ஸ் பள்ளியின் தாளாளர் சகாயராஜ் துவக்கி வைத்தார்.முதல் காலிறுதி ஆட்டத்தில், வேளச்சேரி குருநாக் கல்வி சங்கம், 25 - 18, 25 - 18 என்ற கோல் கணக்கில் ஆலந்துார் மான்போர்ட் அணியையும், கண்ணகி நகர் கிளப், 25 - 17, 25 - 14 என்ற கோல் கணக்கில், போரூர் ஸ்கை ஸ்பைக்கர் அணியையும் தோற்கடித்தன.அடுத்து நடந்த போட்டியில், செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 12, 25 - 14 என்ற கோல் கணக்கில் மயிலாப்பூர் பாய்ஸ் அணியையும், யுனைடெட் வாலிபால் 'பி' கிளப், 25 - 8, 25 - 14 என்ற கோல் கணக்கில், யுனைடெட் வாலிபால் கிளப் 'ஏ' அணியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.