வாசகர்கள் கருத்துகள் ( 1 )
it is peoples money , which was looted by DMK party functionaries . Now they are enjoying it
சென்னை, கொளத்துார், திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற உள்ள, பாக முகவர்கள் 1,300 பேருக்கு ஊக்கத் தொகையுடன், 14 வகை அசைவ விருந்து நேற்று பரிமாறப்பட்டது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கொளத்துார் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதிகளில் பணியாற்ற உள்ள பாக முகவர்களுக்கான கூட்டம், பெரம்பூர் தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவரான முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பாக முகவர்களுக்கு விருந்து பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு பொதுமக்களிடம் ஓ.டி.பி., பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு தடை விதித்து உள்ளதாக செய்தி வந்துள்ளது. இதுபோன்ற பல தடைகள் நம் இயக்கத்துக்கு வந்துள்ளது. தி.மு.க., அத்தனை தடைகளையும் உடைத்து எரிந்த இயக்கம். தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், தமிழகத்தின் சிறப்பான தொகுதி கொளத்துார். தமிழகத்தில் தி.மு.க., அலை வீசுகிறது; வரும் தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். பாக முகவர்களுக்கு தடபுடல் விருந்து அளிக்கப் பட்டது. மட்டன் பிரியாணி, மட்டன் கோலா உருண்டை, வஞ்சிரம் மீன் வறுவல், காடை வறுவல், சிக்கன் 65, நாட்டுக் கோழிகுழம்பு, இறால் தொக்கு, மீன் குழம்பு, பரோட்டா, முட்டை, சாதம், ரசம், கத்திரிக்காய் கூட்டு, தயிர் பச்சடி, பிரட் அல்வா உள்ளிட்ட 14 வகையான உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. மதுரவாயல் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மதுரவாயல், மேட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் அரங்கில், நேற்று முன்தினம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிகழ்வில், அமைச்சர் சுப்பிரமணியன், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு, மீன் வறுவல் என, தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். தி.மு.க கறி விருந்து படவிளக்கம் கொளத்துார் மற்றும் திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி தி.மு.க., பாகமுகவர்களுக்கு நேற்று பெரம்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட அசைவ விருந்தை, நிர்வாகிகளுடன் சேர்ந்து ஒரு கட்டு கட்டிய அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர்.தண்ணீர் கேன் சுமந்த மாணவர்கள் தி.மு.க., நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள், பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு, தண்ணீர் கேன்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்டன. அவற்றை, நிகழ்ச்சி அரங்கிற்கு எடுத்துச் செல்லும் பணியில், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
it is peoples money , which was looted by DMK party functionaries . Now they are enjoying it