உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 14வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழா தி.நகர் வாணி மஹாலில் துவக்கம்

14வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழா தி.நகர் வாணி மஹாலில் துவக்கம்

தி.நகர், தி.நகர் வாணி மஹாலில், 14வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழா துவங்கியுள்ளது. ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா மற்றும் 'இண்டோ நேஷனல் லிமிடெட்' இணைந்து நடந்தும், 14வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழாவை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி, நேற்று தி.நகரில் துவக்கி வைத்துள்ளார். விழா வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்வில், வாய்ப்பாட்டு இசை கலைஞர் பிருந்தா மாணிக்கவாசகன், வயலின் வித்துவான் ஸ்ரீகாந்த், மிருதங்க வித்துவான் பாலாஜி, பரதநாட்டிய கலைஞர் ராதிகா வைரவேலன், நாடக கலைஞர் லாவண்யா வேணுகோபால் உள்ளிட்டோருக்கு, 'வாணி கலா நிபுணா' விருதை வழங்கினார். நிகழ்ச்சியில், தியாக பிரம்ம கான சபா தலைவர் மூர்த்தி, ஹம்சத்வனி சபா செயலர் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை சந்திரமோகன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, ராமநாதன் குழுவின் சாக்ஸபோன் கச்சேரி நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு மேற்கு மாம்பலம் வித்யாவாணி சங்கீதா வித்யாலயா மாணவர்களின் நாம சங்கீர்த்தனம்; மாலை 6:30 மணிக்கு அர்ச்சனா மற்றும் சமன்வி குழுவினரின் இசை கச்சேரி நடைபெற உள்ளது. விழாவில் நீதிபதி பி.பி.பாலாஜி பேசியதாவது: தி.நகர், வாணி மஹால் பாரம்பரியமும் திறமை வாய்ந்தவர்கள் சந்திக்கும் இடமாகவும் உள்ளது. இசை, நாடகம் ஆகியவை கலைகள். ஆனால், இசை கலைஞர்களையும் நாட்டிய கலைஞர்களையும் ஊக்குவிப்பது, கலையை விட பெரிது என, சபாக்கள் உறுதி செய்து வருகின்றன. இந்த விருதுகள், கலைஞர்களை அங்கீகரிப்பதை விட, அவர்கள் துறையில் தொடர்ந்து சாதிக்கவும் உயரவும் ஊக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ