மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் சிக்கினர்
17-Nov-2024
செங்குன்றம், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக, செங்குன்றம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை அங்கு சென்ற, இன்ஸ்பெக்டர் மலர் செல்வி தலைமையிலான போலீசார், அங்கு சந்தேகப்படும்படி, சுற்றித்திரிந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.விசாரணையில், சிதம்பரம், அம்மாபேட்டையைச் சேர்ந்த ரஞ்சித், 22, என தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது, சிதம்பரம் காவல் நிலையத்தில், அடிதடி, கஞ்சா உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
17-Nov-2024