உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  150 கஞ்சா சாக்லேட் பறிமுதல் இருவர் கைது

 150 கஞ்சா சாக்லேட் பறிமுதல் இருவர் கைது

படப்பை: படப்பை அருகே சாலமங்கலம் பகுதியில், படப்பை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்கள் இருவரை பிடித்து, சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம், 150 கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்டவர்கள் பீஹாரை சேர்ந்த ராம்பாபு, 28, அணில்குமார், 25, என்பது தெரிந்தது. பீஹாரில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்த இவர்கள், தங்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ