உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விதிமீறி வைத்த 150 பேனர்கள் அகற்றம்

 விதிமீறி வைத்த 150 பேனர்கள் அகற்றம்

ஆவடி: ஆவடியில், பொதுமக்களுக்கு இடையூறாக, விதிமீறி சாலைகளில் வைக்கப்பட்ட 150 பேனர்கள், அதிகாரிகளால் அகற்றப்பட்டன. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அனுமதியின்றி சாலைகளில் பேனர்கள் வைக்கின்றனர். இதனால், கவனச்சிதறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஆவடி சி.டி.எச்., சாலை, பட்டாபிராம், திருமுல்லைவாயில், புதிய ராணுவ சாலை, கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில், விதிமீறி வைக்கப்பட்ட 150 பேனர்களை, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், கடந்த இரு நாட்களில் அகற்றியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை