உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரா டேபிள் டென்னிஸ் 150 வீரர்கள் தகுதி

பாரா டேபிள் டென்னிஸ் 150 வீரர்கள் தகுதி

சென்னை,மெட்ராஸ் சென்னா பாட்னா சுழற்சங்கம் சார்பில், தேசிய ஓபன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.'சீசன் - 3' தொடருக்கான இப்போட்டி, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது. முன்னதாக, போட்டியில் பங்கேற்க, தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 225 பேர் பதிவு செய்திருந்தனர்.இதில், எப்போதும் வீல் சேரில் இருப்போர், முதுகுத் தண்டு காயம், நிற்க இயலாமை உள்ளிட்ட 13 வகையாக பிரிக்கப்பட்டு தேர்வு நடந்தது. தேர்வான 150 வீரர் - வீராங்கனைகள் நேற்றைய போட்டியில் பங்கேற்றனர்.போட்டியில், ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என, இருபாலருக்கும் நடந்தது.பங்கேற்பாளர்களுக்கு ரயில் கட்டணம், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி