மேலும் செய்திகள்
வீடுகளில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினார்
09-Sep-2025
சென்னை, தனியார் நிறுவனத்தில், முறைகேடாக வாங்கி பயன்படுத்திய 150 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய உளவுத்துறை அறிவுறுத்தலின்படி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அம்பத்துாரில் அமைந்துள்ள தனியார் 'டெலி மார்க்கெட்டிங்' நிறுவனத்தில், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரே நபரின் பெயரில் முறைகேடாக 40க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அந்நிறுவனத்தில் இருந்து, 150க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், தொலைத்தொடர்பு மற்றும் இணையதள பயன்பாட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பாஸ்கர், 36, என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு அழைத்து சென்று, விசாரணைக்கு பின் அனுப்பி வைத்தனர். ஒரே நபரின் பெயரில் அதிக சிம்கார்டுகளை விற்பனை செய்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
09-Sep-2025