உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கை மாவட்ட சிலம்பம் 1,500 மாணவர்கள் பங்கேற்பு

செங்கை மாவட்ட சிலம்பம் 1,500 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை,செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி, வண்டலுாரை அடுத்த மேலக்கோட்டையூரில், நேற்று காலை துவங்கியது.போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 870 மாணவியர் உட்பட, மொத்தம் 1,500 மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.காலை துவங்கிய போட்டியை, இந்திய சிலம்பம் சம்மேளத்தின் தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவர் பிரதீப் ஆர் ராஜே ஆகியோர் துவக்கி வைத்தனர்.போட்டியில், 4 - 10 வயது வரையிலான மினி சப் - ஜூனியர், 11 - 12 வயது சப் - ஜூனியர், 13 - 17 வயது ஜூனியர், 17 - 22 வரையிலான யூத், 35 வரையிலான ஓபன் பிரிவு என, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள், இன்று மாலை வரை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !