தந்தை இறந்த சோகத்தில் 16 வயது மகன் தற்கொலை
மதுரவாயல், ந்தை இறந்த சோகத்தில் இருந்து மீளமுடியாத மகன், தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனி, ஏழாவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் மேனகாஸ்ரீ, 43. இவரது கணவர், கடந்த 2022 அக்டோபர் மாதம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு, பிளஸ் 1 படிக்கும் ஜெயபிரதாப், 16, என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேனகாஸ்ரீ, அவரது பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளியிலேயே ஊழியராக பணிபுரிகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல், தன் மகளை ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். சைக்கிளில் பள்ளிக்கு வரவேண்டிய மகன், நாள் முழுதும் வராமல் இருந்துள்ளார். மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட ஜெயபிரதாப், அதேசோகத்திலேயே இருந்துள்ளார். சமீபத்தில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'இட்லி கடை' படத்தை பார்த்துவிட்டு, தந்தை காட்சிகளால் மேலும் சோகமாக இருந்ததாக தெரிகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.