உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்டார் ஹோட்டலில் கஞ்சா புகைத்த 18 பேர் கைது

ஸ்டார் ஹோட்டலில் கஞ்சா புகைத்த 18 பேர் கைது

சென்னை, கீ ழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியாருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக, கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட ஹோட்டலில் நேற்று காலை அதிரடியாக நுழைந்து, போலீசார் ஆய்வு செய்ததில், ஏராளமானோர் மது அருந்தியும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை புகைத்து கொண்டிருந்தது தெரிந்தது. விசாரணையில், வெவ்வேறு இடங்களில் உள்ள பஜார்களில் வியாபாரம் செய்யும் 18 பேர் என்பது தெரிந்தது. இதில், பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும் தெரிந்தது. அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி