மீனாட்சி கல்வி குழுமத்தில் 18வது பட்டமளிப்பு விழா
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துாரில் உள்ள, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின்18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, அதன் கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு, நிறுவன வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மோகன் நீரிழிவு சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மோகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அவர், 705 இளங்கலை, 103 முதுகலை, 24 முனைவர் பட்டம் என, மொத்தம் 832 மாணவர்களுக்கு, பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார்.நுண்ணியல் நரம்பியல்அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ்பாபுவுக்கு, டி.எஸ்.சி., பட்டம் வழங்கப்பட்டது.மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் கல்லுாரிகளைச் சேர்ந்த, 76 மாணவர்கள் பதக்கங்களை பெற்றனர். மருத்துவ மாணவி ஹரிதாகுமாரி, 11 பதக்கங்கள் பெற்று, சாதனையாளராக பாராட்டப்பட்டார்.நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் நீரிழிவு நோயியல் துறை ஆராய்ச்சிக்கு 10 லட்சம் ரூபாய்; 'இட்லி பாட்டி' என புகழ்பெற்ற, கமலாத்தாளின் மனிதாபிமான சேவைகளை பாராட்டி, இரண்டு லட்சம் ரூபாய், கல்வி நிறுவனம் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டது.