உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  1,922 புது பெட்டிகள் ஐ.சி.எப்.,பில் தயாரிப்பு

 1,922 புது பெட்டிகள் ஐ.சி.எப்.,பில் தயாரிப்பு

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை, 1,922 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: பயணியருக்கான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கும் ஐ.சி.எப்., ஆலையில், 2025 -- 26ம் நிதி ஆண்டில், 2,671 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரையில், 1,922 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள பெட்டி தயாரிப்பு பணிகள், வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !