உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.50 கோடி நிலம் அபகரித்த 2 பேர் கைது

ரூ.2.50 கோடி நிலம் அபகரித்த 2 பேர் கைது

சென்னை; கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பியூலா லிலின் நல்லதம்பி, 78; ஓய்வு பெற்ற டாக்டர். இவருக்கு, அண்ணா நகர் முதல் தெருவில், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,195 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து அபகரித்துள்ளனர். மேலும், அந்த நிலத்தை வங்கி ஒன்றில் அடமானம் வைத்தும் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, 2024, நவ., 25ல், பியூலா லிலின் நல்லதம்பி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, திருவான்மியூரைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஹரிநாத், 36, மற்றும் தனியார் நிறுவன மேலாளர் சேஷாத்ரி ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ