உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மணலி, மணலியைச் சேர்ந்த சாமிவேலு மகன் சஞ்சய், 12, மற்றும் சிவகுமார் மகன் விஷால், 13, ஆகிய இருவரும் நண்பர்கள். மணலி அரசு பள்ளியில் 8ம் மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள்.சிறுவர்கள் இருவரும், நண்பர்களுடன் சேர்ந்து, மாத்துார் ஏரியில் நேற்று குளித்தனர். அப்போது, ஏரியின் சேற்றில், சிறுவர்கள் இருவரும் சிக்கினர்.இதுகுறித்த தகவலின்படி, ஏரிக்கு சென்ற மணலி தீயணைப்பு துறையினர், சிறுவர்கள் இருவரையும் மீட்டு, மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு நடந்த பரிசோதனையில், சிறுவர்கள் ஏற்கனவே இறந்தது உறுதியானது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுவர்களின் உடல், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ