இயந்திர கோளாறு 2 விமானங்கள் ரத்து
சென்னை:அந்தமானில் இருந்து, நேற்று காலை சென்னைக்கு வந்து, திரும்பி செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் தனியார் பயணியர் விமானம், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, அந்தமானில் இருந்து புறப்படாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.அதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு நேற்று மதியம் 1:35 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானமும், இயந்திர கோளாறு காரணமாக, நேற்று ரத்து செய்யப்பட்டது.இந்த விமானத்தில் பயணிக்க வந்த 130 பேர், மாற்று விமானங்களில், மும்பைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.அதேபோல், அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய பயணியருக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இயந்திர கோளாறு காரணமாக, இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.