உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி அருகே மரம் விழுந்து 2 பேர் காயம்; வாகனங்கள் சேதம்

கிண்டி அருகே மரம் விழுந்து 2 பேர் காயம்; வாகனங்கள் சேதம்

கிண்டி:சென்னையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை செய்தது. இந்த நிலையில், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலை பேருந்து நிலையம் அருகே, சீமை வாகை எனும் துாங்குமூஞ்சி மரம் ஒன்று வேரோடு சாலையில் சாய்ந்தது.இதில், அவ்வழியாக நடந்து சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 47, என்பவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும், ஆட்டோ மற்றும் சில இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இதில், ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ், 39, மற்றும் அவரது நண்பர் ஒருவர், கழுத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.கிண்டி போலீசார் நீண்ட நேர பேராட்டத்திற்கு பின், மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.இந்த சம்பவத்தால், வேளச்சேரியில் இருந்து கிண்டி ரயில் நிலையம் வழியாக சின்னமலை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலால் அரை மணி நேரத்திற்குமேல் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை