2 மின்மாற்றிகள் துவக்கி வைப்பு
கோவிலம்பாக்கம்:பரங்கிமலை ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம், அருள் முருகன் நகர், செல்வராஜ் நகர் ஆகிய பகுதிகளில் 300 வீடுகள்; எஸ்.கொளத்துார் ராஜேஸ்வரி நகரில் 275 வீடுகள் உள்ளன.இப்பகுதிகளில் அடிக்கடி மின் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர்.இதையடுத்து, 4.50 லட்சம் ரூபாய், 4.75 லட்சம் ரூபாயில், அப்பகுதிகளில் தலா ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இரு மின்மாற்றிகளின் இயக்கத்தை, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று துவக்கி வைத்தார்.