மேலும் செய்திகள்
போதை மாத்திரை சப்ளை கல்லுாரி மாணவர்கள் கைது
26-Apr-2025
சென்னை, அபிராமபுரம் போலீசார், நேற்று காலை காமராஜர் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 270 போதை மாத்திரைகள், ஐந்து சிரஞ்சுகள் வைத்திருந்தது தெரியவந்தது.தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த தீபக்குமார், 26, சுரேஷ், 24, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், போதை மாத்திரகைகள், ஐந்து சிரஞ்சுகள், மொபைல் போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
26-Apr-2025