உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞரை வெட்டிய 2 வாலிபர்கள் கைது

இளைஞரை வெட்டிய 2 வாலிபர்கள் கைது

குன்றத்துார், டிச.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுபான், 23. இவர், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது பக்கத்து அறையில் தங்கியிருக்கும் ஒடிசாவை சேர்ந்த சாகர், 22, ஜெகன், 21, ஆகியோரின் அறைக்கு சென்ற சுபான், அவர்கள் வைத்திருந்த காய்கறிகளை எடுத்து சமைக்க சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சாகர், ஜெகன் இருவரும் சேர்ந்து, சுபானை கத்தியால் வெட்டினர். பலத்த காயமடைந்த சுபான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து சாகர், ஜெகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை