கோவிலில் 20 சவரன் நகை திருட்டு
போரூர், போரூர் அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் பிரதான சாலையில், ஜெயின் கோவில் அமைந்துள்ளது. வழக்கம்போல, நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டபோது, திருத்தங்கரா சிலையின் நெற்றில் பதிக்கப்பட்டிருந்த 20 சவரன் நெற்றி சுட்டி நகை மாயமானது தெரியவந்தது.இதையடுத்து கோவில் நிர்வாகி சஞ்சய் மேத்தா, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், வெளியாட்கள் யாரும் கோவில் உள்ளே சென்றதற்கான காட்சிகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், கோவில் உள்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.