கும்மிடி தடத்தில் 23 ரயில்கள் ரத்து
சென்னை, பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று, நாளை மற்றும் 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 8:35, 10:15, பகல் 12:10, மதியம் 1:05 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00, 9:30, 9:40, 10:30, 11:35, கடற்கரை - கும்மிடிப்பூண்டி பகல் 12:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது சூலுார்பேட்டை - நெல்லுார் மாலை 3:50, நெல்லுார் - சூலார்பேட்டை மாலை 6:45, சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 10:55, காலை 11:25, நண்பகல் 12:00, மதியம் 1:00, மதியம் 2:30, மாலை 3:15, சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 11:45, மதியம் 1:15, மாலை 3:10, இரவு 9:00 மணி ரயில்களும் மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு ரயில்
சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 9:00, காலை 10;30, எண்ணுாருக்கு காலை 9:30, மீஞ்சூருக்கு காலை 11:35 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் கடற்கரை - பொன்னேரிக்கு பகல் 12:40 மணிக்கும், பொன்னேரி - சென்ட்ரலுக்கு காலை 11:42, எண்ணுார் - சென்ட்ரலுக்கு பகல் 12:43, பொன்னேரி - சென்ட்ரலுக்கு மதியம் 1:18, மீஞ்சூர் - சென்ட்ரல் மதியம் 2:59, பொன்னேரி - சென்ட்ரலுக்கு மாலை 3:33 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சேவையில் மாற்றம்
கடற்கரை - எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 11:45 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:30 மணி வரையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது. கடற்கரை - தாம்பரம் காலை 6:15 மணி ரயில் நாளை ரத்தாகிறது கூடுவாஞ்சேரி - கடற்கரை இரவு 10:40, 11:15 மணி ரயில்கள் இன்று தாம்பரம் வரை இயக்கப்படும் செங்கல்பட்டு - கடற்கரை இரவு 10:10, 11:00 மணி ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படும் என,சென்னை ரயில் கோட்டம் அறிக்கை விட்டுள்ளது.