உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 56 மணி நேரத்தில் 235 மனை விற்பனை ஜி ஸ்கொயர் ஆரண்யாவில் சாதனை

56 மணி நேரத்தில் 235 மனை விற்பனை ஜி ஸ்கொயர் ஆரண்யாவில் சாதனை

சென்னை :சென்னை போரூரில், 'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தின் ஆரண்யா திட்டத்தின் முதல் பகுதி அறிமுகம் செய்யப்பட்டு, 56 மணி நேரத்தில், 235 வில்லா மனைகள் விற்பனையாகி உள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ், பல்வேறு பகுதிகளில் பிரீமியம் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்த வகையில், அபார்ட்மென்ட் விலையில் வில்லா மனைகள் வழங்குவதற்காக, 'ஜி ஸ்கொயர் ஆரண்யா' என்ற புதிய திட்டம் போரூரில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல்பகுதி ஏப்., 12ல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட, 56 மணி நேரத்துக்குள் இத்திட்டத்தில், 140 கோடி ரூபாய் மதிப்பிலான, 235 வில்லா மனைகள் விற்பனையாகி உள்ளன. சமீப காலத்தில் வேறு எந்த திட்டத்திலும் இல்லாத வகையில், இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, ஜி ஸ்கொயர் ஆரண்யா திட்டத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டு உள்ளது. இதில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 200க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள், வில்லா மனைகள் அடங்கியுள்ளன. இதுகுறித்து, ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பாலா என்ற ராமஜெயம் கூறுகையில், ''ஜி ஸ்கொயர் ஆரண்யாவுக்கான வரவேற்பு, எங்கள் எதிர்பார்ப்புகளை மீறியுள்ளது. முதல்கட்டத்தில் மனைகள் விற்று முடிந்துள்ளது, வாடிக்கையாளர்கள் எங்களிடம் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது,'' என்றார். **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !