உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 24 கிலோ குட்கா பறிமுதல் அயனாவரத்தில் 2 பேர் கைது

24 கிலோ குட்கா பறிமுதல் அயனாவரத்தில் 2 பேர் கைது

அயனாவரம், அயனாவரம், சபாபதி தெருவில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணித்த போது, சந்தேகத்தின் படி, ஒருவரை பிடித்து சோதித்தனர்.அவரிடம், சில கிராம் குட்கா பொருள் இருந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சேரந்த ராம்பாபு, 39 என்பது தெரிந்தது. அவரது தகவல்படி, வில்லிவாக்கம், ஜெகநாதன் நகரை சேர்ந்த பிரகாஷ், 50, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்து, 24.34 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை