மேலும் செய்திகள்
விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு
06-Oct-2024
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தவர் சத்தியமூர்த்தி, 27. இவர், அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக, தன் இருசக்கர வாகனத்தில் 26ம் தேதி சென்றார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அடுத்த அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் மோதிய விபத்தில், பலத்த காயம் அடைந்தார்.சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், போலீஸ்காரரின் இறப்பு அறிந்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். சத்தியமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் போலீசாருக்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். சத்தியமூர்த்தியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய், நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
06-Oct-2024