உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டிய 274 போலீசாருக்கு அபராதம் விதிப்பு

ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டிய 274 போலீசாருக்கு அபராதம் விதிப்பு

சென்னை, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கி, போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கேமரா பதிவுகள் அடிப்படையிலும், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.அதேநேரம், சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், விதிமீறலில் ஈடுபடும் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் பலர் கேள்வி எழுப்பினர். இது தொடர்பான செய்திகளும் வெளியாயின.இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார்.அதன்படி, நான்கு நாட்களில் மட்டும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டிய, 274 போலீசாருக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கணக்கு காட்டுவதாக இல்லாமல், பாரபட்சமில்லாத நடவடிக்கை தொடர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை