28 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து
சென்னை: சென்னைக்கு வர இருந்த மற்றும் சென்னையில் இ ருந்து புறப்பட இருந்த, 28 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஒன்பது நாட்களாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அந்த விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு உள்ளிட்ட நாடுகளுக்கும், டில்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும், நேற்று அதி காலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படவிருந்த, 14 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், சிங்கப்பூர் உள் ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வர இருந்த, 14 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில், நேற்று முன்தினம், 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையி ல், அதன் எண்ணிக்கை, நேற்று 28 ஆக குறைந்துள்ளது. அதே போல், பல மடங்கு வசூலிக்கப்பட்டு வந்த விமான கட்டணங்களும் குறைந்துள்ளன.