உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் 28 சவரன் திருட்டு பணிப்பெண், இருவர் கைது

வீட்டில் 28 சவரன் திருட்டு பணிப்பெண், இருவர் கைது

எஸ்பிளனேடு, பிராட்வே, சிங்கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஷபீர் கைசர், 36. இவர் பீரோவில் இருந்த நகைகளை 16ம் தேதி, சரிபார்த்தபோது, 28 சவரன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து, எஸ்பிளனேடு போலீசாரின் விசாரணையில், ஷபீர் வீட்டில் வேலை பார்க்கும், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷாஜிமா, 36, என்பவர், நகைகள் திருடியது தெரியவந்தது.மேலும், திருடிய நகைகளை, கொருக்குப்பேட்டையச் சேர்ந்த தன் சகோதரி தில்ஷா பானு, 44, மற்றும் முஸ்தபா, 32, ஆகியோருடன் சேர்ந்து, அடமானம் வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது.அவர்களிடமிருந்து, 35 கிராம் தங்க நகைகள், 6.55 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மூவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின், நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை