மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தியவர் கைது
23-Apr-2025
திருவொற்றியூர், திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை திருவொற்றியூர் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில், சுற்றித் திரிந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், எர்ணாவூரைச் சேர்ந்த சசிகுமார், 19, திருவொற்றியூரைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், 20, வந்தவாசியைச் சேர்ந்த ரிஷிகுமார், 22, என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள், ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி, இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
23-Apr-2025