உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடமாநில தொழிலாளியை கடத்தி பணம் பறித்த 3 சிறுவர்கள் கைது

வடமாநில தொழிலாளியை கடத்தி பணம் பறித்த 3 சிறுவர்கள் கைது

ஏழுகிணறு, வடமாநில தொழிலாளியை கடத்தி, நாதன முறையில் பணம் பறித்த மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிர்மல்சிங், 23, ஏழுகிணறு பகுதியில் தங்கி, கோவிந்தப்பா தெருவில் உள்ள பொம்மை கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். இம்மாதம் 10ம் தேதி மாலை, வைத்தியநாதன் தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, என்பீல்டு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்து, தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்துள்ளனர்.பின், நிர்மல் சிங்கை, டூ -வீலரில் ஏற்றிச்சென்று, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டடத்தில் கட்டி போட்டு விட்டு, ஆன்லைன் வழி பண பரிவர்த்தனை செயலியான, 'ஜி பே' வழியாக, 15,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து கொண்டு தப்பினர்.காயமடைந்த நிர்மல்சிங், அங்கிருந்து தப்பி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பூக்கடை உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.அதன்படி, தாக்குதலில் தொடர்புடைய, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த, 17 வயதுடைய மூன்று சிறுவர்களை நேற்று கைது செய்தனர்.கைதானவர்களில் ஒருவன், சட்டக் கல்லுாரி மாணவர்.அவர்களிடமிருந்து, இருசக்கர வாகனம், 8,000 ரூபாய், மொபைல் போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணைக்குப்பின், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை