உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரக்கிளை விழுந்து 3 கார்கள் சேதம்

மரக்கிளை விழுந்து 3 கார்கள் சேதம்

திரு.வி.க.நகர்: திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தின் உள்ளே, பின்பக்கம் இருந்த மருதமரத்தின் பெரிய கிளை, நேற்று திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஹூண்டாய் மற்றும் ஒரு ரெனால்ட் ரகம் என, மூன்று கார்கள் சேதமடைந்தன. தகவலறிந்த செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை