உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் கம்பம் சாய்ந்து 3 குடிசை தீக்கிரை

மின் கம்பம் சாய்ந்து 3 குடிசை தீக்கிரை

திருநீர்மலை:குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை, உய்யாலம்மன் கோவில் அருகே லால்பகதுார் சாஸ்திரி தெருவில், குடிசையில் வசிப்பவர் உத்திரமூர்த்தி.அவரது சகோதரர்களான கார்த்தி, பாண்டியன் ஆகியோரும், குடும்பத்தினருடன் தனித்தனியாக அடுத்தடுத்து குடிசையில் வசிக்கின்றனர்.இவர்களது வீட்டு அருகே நின்ற பழுதடைந்த மின் கம்பம், நேற்று மதியம் திடீரென வீடு மீது சாய்ந்தது. இதில், மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறிகள் விழுந்து, குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன. சற்று நேரத்தில், மளமளவென பரவி தீயால், மூன்று குடிசைகளும் தீக்கிரையாயின.தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவமால் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். விபத்தில், குடிசையில் இருந்த 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாகின. வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை.வீட்டின் அருகே பழுதடைந்த நிலையில் இருந்த மின் கம்பத்தை மாற்றுமாறு, பலமுறை மின் வாரியத்தில் புகார் அளித்தும், மின் வாரியம் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி