உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 21; தனியார் கல்லுாரி மாணவர். தாயுடன் வசித்து வருகிறார். புதிதாக வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதால், தங்களது வீட்டில் இருந்த பொருட்களை, வாடகை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று காலை வீட்டில் பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து, 'ஏசி இன்வெர்ட்டர்' உள்ளிட்ட பல பொருட்கள் திருடு போயிருந்தன.இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு வ.உ.சி., நகரைச் சேர்ந்த ‛ஸ்வீட்' சஞ்சய், 19, ‛பாஷா' தனுஷ், 21, அஜய், 19, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை