உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருவரிடம் போன் பறித்த 3 பேர் கைது

இருவரிடம் போன் பறித்த 3 பேர் கைது

தரமணி, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் தேவராஜ், 42. கடந்த 6ம் தேதி இரவு, தரமணி, நேருநகரில் நடந்து செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், தேவராஜ் வைத்திருந்த மொபைல் போனை பறித்து சென்றனர். தரமணி போலீசாரின் விசாரணையில், ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த காளிதாசன், 19, ஈஸ்வரமூர்த்தி, 21, என தெரிந்தது. நேற்று, இருவரையும் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.*சைதாப்பேட்டை, செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 25. கடந்த 7ம் தேதி, சைதாப்பேட்டை, அபித் காலனி வழியாக நடந்து சென்றபோது, நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர். விசாரித்த சைதாப்பேட்டை போலீசார், சைதாப்பேட்டை, நெருப்புமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 21, என்ற நபரை கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை