உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொகைன் போதை பொருள் வழக்கில் மாஜி டி.ஜி.பி., மகன் உட்பட 3 பேர் கைது

கொகைன் போதை பொருள் வழக்கில் மாஜி டி.ஜி.பி., மகன் உட்பட 3 பேர் கைது

ஆலந்துார்:கொகைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, முன்னாள் டி.ஜி.பி.,யின் மகன் உள்ளிட்ட மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.பரங்கிமலை பகுதியில் நேற்றுமுன்தினம், போதையில் தள்ளாடிப்படி நடந்து வந்த இருவரை மடக்கி, தனிப்படை போலீசார் விசாரித்தனர். முடிச்சூரை சேர்ந்த அருண், 40; வியாசர்பாடியை சேர்ந்த மெக்களன்,32, என்பதும், இருவரும் கொகைன் போதை பொருள் உட்கொண்டிருப்பதும் தெரியவந்தது.அவர்கள், அண்ணா நகரில் வசித்து வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் எரிக் ஷன்,45, என்பவரிடம் இருந்து, கொகைன் போதைப் பொருளை வாங்கியதாக கூறினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, தனிப்படை போலீசார் ஜான் எரிக் ஷனை கைது செய்தனர் அவரிடம் இருந்த, 27,000 ரூபாய் மதிப்பிலான, 3 கிராம் கொகைன் போதை பொருள், ரொக்கமாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டு மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து, பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும், ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கைதான அருண், முன்னாள் டி.ஜி.பி., ரவீந்திரநாத்தின் மகன்.இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா; போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை