உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மே.வங்கத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மே.வங்கத்திற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, மேற்கு வங்க மாநிலத்திற்கு ரயிலில் கடத்த முயன்ற, 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில், 3 - 4 பிளாட்பாரத்தை ஒட்டியுள்ள முட்புதரில், ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை, நேற்று காலை ரோந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். பின், மறைத்து வைக்கப்பட்டிருந்த, 140 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் எடை, 3 டன் என்பது தெரியவந்தது. பின், அவற்றை, தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி