கொடுங்கையூரில் 30 காற்றாடிகள் பறிமுதல்
கொடுங்கையூர், கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார், நேற்று, கொடுங்கையூர், சின்னாண்டி மடம், அம்பேத்கர் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காற்றாடி பறப்பது தெரியவந்தது.அதன்படி, காற்றாடி பறக்க விட்ட அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் வலைத்தளங்கள் வாயிலாக, 30 காற்றாடியை, 310 ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்தது. அந்த காற்றாடிகளை பறிமுதல் செய்த போலீசார், சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.