உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி வணிக வளாக 30 கடைகளுக்கு சீல்

மாநகராட்சி வணிக வளாக 30 கடைகளுக்கு சீல்

திருவொற்றியூர், டிதிருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே, 1990ல் கட்டப்பட்ட மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தின் பின்புறம், 100 படுக்கை வசதிக் கொண்ட, நகர்புற நலவாழ்வு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் செல்ல வசதியாக, வணிக வளாகத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. நோட்டீஸ் அளித்தும், வியாபாரிகள் கடைகளை காலி செய்ய மறுத்து விட்டனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு பெற்று, மாநகராட்சி அதிகாரிகள், 30 கடைகளையும் பூட்டி, 'சீல்' வைத்தனர். இதில், அம்மா உணவகமும் அடங்கும்.'சீல்' வைப்பால் பாதிக்கப்பட்ட வாடகைதாரர்கள், பொருட்களை எடுக்க, ஜன., 25வரை, அதிகாரிகளிடம் அவகாசமும், புதிய வணிக வளாகம் கட்டும்போது, தற்போதைய வாடகைதாரருக்கு முன்னுரிமையும் வழங்க வேண்டும் என, கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ