ராகுல் கைதை கண்டித்து மறியல் 300 பேர் கைது
சென்னை, காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கைதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட, தமிழக காங்கிரசார் 300 பேரை, நேற்று போலீசார் கைது செய்தனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்ற ராகுல் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியினர், டில்லியில் நேற்று கைது செய்யப்பட்டனர். ராகுல் கைதை கண்டித்து, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட, 300க்கும் மேற்பட்டோர், சத்தியமூர்த்திபவனில் இருந்து அண்ணா சாலை நோக்கி சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர்.