உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 30,000 அ.தி.மு.க., ஓட்டுகள் மாயம் மாஜி எம்.எல்.ஏ., பகிர் குற்றச்சாட்டு

30,000 அ.தி.மு.க., ஓட்டுகள் மாயம் மாஜி எம்.எல்.ஏ., பகிர் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்:திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில், தேர்தல் பணிகள் குறித்த பாக முகவர்கள் கூட்டம், பகுதி செயலர் குப்பன் தலைமையில் நடந்தது.இதில், கவுன்சிலர்கள் கார்த்திக், ராஜேஷ்சேகர், ஸ்ரீதரன் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், கவுன்சிலர் கார்த்திக் பேசியதாவது:புது கட்சியை பார்த்து தி.மு.க., பயப்படுகிறது. மக்கள் இந்த ஆட்சியின் மீது வெறுப்பாக உள்ளனர். எப்போது வேண்டுமானாலும், துாக்கியடிக்க தயாராகி விட்டனர்.இந்த தொகுதியில், 311 ஓட்டு பூத்கள் உள்ளன. கடந்த எம்.பி., தேர்தலில், 25,000 - 30,000 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஏழாவது வார்டின், சார்லஸ் நகரில் மட்டும் 500 ஓட்டுகள் காணவில்லை.பாக முகவர்கள் களப்பணியாற்றினால் மட்டுமே, கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்வர் கனவு நனைவாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பேசியதாவது:விஜய் சேர்ந்தாலும், சேராவிட்டாலும், அ.தி.மு.க., 30 சதவீதம் ஓட்டுகளை பெற்றால், ஆட்சியை பிடித்து விட முடியும். 311 பூத்களுக்கு கிளை கழகங்கள் அமைக்கப்பட உள்ளது. அதில், 1 லட்சம் இளைஞர்களுக்கு பதவிகள் போடப்பட்டுள்ளன.கடந்த தேர்தலில், மாயமான 30,000 ஓட்டுகளும் அ.தி.மு.க.,விற்கானது. அதை உடனடியாக சேர்க்க வேண்டும். புதிய ஓட்டுகள் மீதும் கவனம் தேவை.டிசம்பர் மாதம் இறுதிக்குள், 25,000 ஓட்டுகளை சேர்த்தாக வேண்டும். கோரமண்டல் நிறுவனம் திறப்பை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை