நீச்சல் குளம் நீர் மறுசுழற்சிக்கு ரூ.3.41 கோடி
சென்னை,மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம், 1942ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின், 1947ல் மாநகராட்சி வசம் ஒப்படைத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த நீச்சல் குளம், 1.37 கோடி ரூபாயில், மறுசீரமைப்பு செய்து, கடந்த மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.இங்குள்ள, நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பு அமைத்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதை நவீன முறையில் கட்டமைக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, 3.41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், 45 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி, பருவமழை முடிந்தவுடன் துவங்கும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.