உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 21 கிலோ கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

21 கிலோ கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

கொரட்டூர், கொரட்டூர் பேருந்து நிலையத்தில், அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று காலை கண்காணிப்பில்ஈடுபட்டனர். அங்கு, கையில் பையுடன் சுற்றித்திரிந்த இருவரின் பைகளை சோதனையிட்டதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.அவர்களிடம் விசாரித்ததில் பெரம்பூர், பி.எம்., தெருவைச் சேர்ந்த சேதுராமன், 34, வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த சீனிவாசன், 34, என்பது தெரிந்தது.இருவரும், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து, கொரட்டூர், அம்பத்துாரில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.அதேபோல், கொடுங்கையூர், இந்திரா நகர், கைலாசம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தாரணி, 27, வினோதினி, 29, ஆகிய இருவரும், கஞ்சா விற்றனர். இவர்களை கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்து, 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ