உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹெராயின் விற்பனை 4 பேர் கைது

ஹெராயின் விற்பனை 4 பேர் கைது

சென்னை, பெரியமேடு ஆய்வாளர் தலைமையிலான போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு பட்நுால் சந்துஷா தெருவில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சிறுவன் உட்பட நான்கு பேரை, பிடித்து விசாரித்தனர். பின் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, 14.97 கிராம் ஹெராயின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரிப் மியா, 23, முகமது உசேன், 36, சாஹர் தேப்நாத், 24, மற்றொருவர், 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.நேற்று மூவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையிலும், சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும் சேர்த்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 14.97 கிராம் ஹெராயின், மூன்று மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி