இன்று முதல் செப்., 6 வரை 4 ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - திருப்பதி உட்பட நான்கு ரயில்களின் சேவையில், இன்று முதல் செப்., 6ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், திருப்பதி செல்ல வேண்டிய குறுகிய துார பயணியர் ரயில்கள், திருச்சானுார் வரை இயக்கும் வகையில், இன்று முதல் செப்., 6ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் - திருப்பதி காலை 9:15 மணி ரயில், திருச்சானுார் வரை இயக்கப்படும் திருப்பதி - சென்ட்ரல் மதியம் 1:25 மணி ரயில், திருச்சானுாரில் இருந்து இயக்கப்படும் சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில், திருச்சானுார் வரை இயக்கப்படும் திருப்பதி - அரக்கோணம் மாலை 3:40 மணி ரயில், திருச்சானுாரில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.