உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சினிமா வினியோகஸ்தர் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளை

சினிமா வினியோகஸ்தர் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை, வடபழனி, ராகவன் காலனியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த், 67; சினிமா வினியோகஸ்தர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்காக சிகிச்சை பெற்ற இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள மகள் துர்காதேவி வீட்டில் வசித்து வந்தார்.வாரம் ஒருமுறை மட்டும், அவரது வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில், பிரேம் ஆனந்தின் மகன் போஜராஜன், மும்பையில் இருந்து தந்தையை காண குடும்பத்துடன் நேற்று சென்னை, சோழிங்கநல்லுாருக்கு வந்திருந்தார்.இந்த நிலையில், வடபழனி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, பக்கத்து வீட்டில் வசிப்போர் தகவல் தெரிவித்துள்ளனர்.உடனே, போஜராஜன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 40 சவரன் நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.வடபழனி காவல் நிலையத்தில், அவர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ